வெற்றி நம்மை தேடி வரும் நன்னாள் இது
எண்ணப்படி வாழ்வு தரும் பொன்னாள் இது
புத்தாண்டு வாழ்த்துக்கள்…
புத்தாண்டே வருக புது வாழ்வை தருக ..!
ஒளிபடைத்த கண்ணினாய் வா வா வா
உறுதிகொண்ட நெஞ்சினாய் வா வா வா
ஏறு போல் நடையினாய் வா வா வா
வெற்றி கொண்ட கையினாய் வா வா வா
என ஒளி பொருந்திய புத்தாண்டினை பாட்டுக்கொரு புலவர் பாரதியின் பாட்டினால் வரவேற்கிறோம் ..
.ஒளிமயமான எதிர்காலம் உள்ளத்தில் உவகை உணர்த்திட பூக்கும் புத்தாண்டை உவகையுடன் வரவேற்போம்
பொன் எழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
பொன்னாய் புத்தாண்டு பிறந்ததும்
புன்னகை பூத்தது புது வாழ்வில் ..
இடைவிடாமல் கற்றுகொள்பவருக்கு வாழ்க்கை வியப்பாக இருக்கும்.
வியப்பாக வாழ்கையைப் பார்ப்பவருக்குத்தான் அது உற்சாகமாக இருக்கும்
பொழுது புலர்ந்தது, யாம்செய்த தவத்தால்,
புன்மை யிருட்கணம் போயின யாவும்,
எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி
எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி,
புள்ளினம் ஆர்த்தன! ஆர்த்தன முரசம்,
பொங்கியது எங்கும் புத்தாண்டின்
மகிழ்ச்சி ஆர்ப்பரிக்கும் புது வெள்ளம் ..